கோப்புப் படம் 
இந்தியா

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைத்தார்!

ஒடிசா தலைநகரிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

DIN

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார்.

புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு நேரடியான விமான சேவையை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி இன்று (ஜூன் 12) துவங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 180 பயணிகளுடன் கூடிய இண்டிகோ விமானம் புவனேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மேலும், ஒடிசாவில் விளைவிக்கப்பட்ட சுமார் 50 டன் அளவிலான மாம்பழமும் அபுதாபிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், புவனேஸ்வரம் - விசாகப்பட்டிணம் இடையிலான விமான சேவையும் இன்று முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அபுதாபி - புவனேஸ்வரம் இடையில் வாரந்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் நேரடி விமானம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி கூறுகையில், புதியதாகத் துவங்கப்படும் விமான சேவைகளின் மூலம் மேற்கு ஆசிய நாடுகளுடன் நேரடி தொடர்புகளை உண்டாக்க ஒடிசாவுக்கு வாய்ப்பு உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT