விபத்துக்குள்ளான விமானம் 
இந்தியா

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவரின் விடியோ வைரலாகியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் 2 மணி நேரத்துக்கு முன்பு பயணித்து, ஆமதாபாத்தில் இறங்கிய ஆகாஷ் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா 171 விமானத்தில் இருந்து கோளாறுகளையும், குறைபாடுகளையும் படமெடுத்திருக்கிறார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி அவர் விளக்கம் கேட்க நினைத்திருக்கிறார்.

தில்லியிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக விபத்துக்குள்ளான இந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் அவர், விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு பயணம் செய்திருக்கிறார். அப்போது, அவர் அந்த விமானத்தையும், அதில், பயணிகளின் இருக்கையில் வைக்கபபட்டிருக்கும் தொலைக்காட்சி செயல்படவில்லை. தொலைபேசிகள் இயங்கவில்லை என்பதை கண்டறிந்து அதனை விடியோவாக எடுத்துள்ளார்.

விபத்தில் சிக்கிய இந்த விமானம், இன்று முற்பகலில் தில்லியிலிருந்து புறப்பட்டு ஆமதாபாத் சென்றுள்ளது. ஆகாஷ் தில்லியிலிருந்து ஆமதாபாத் சென்றுள்ளார். பிறகு, அந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பியபோதுதான் விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

அதில் 242 பேர் பலியான நிலையில், பெரும்பாலானோர் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தில் ஆகாஷ் பயணித்தபோது அங்கிருந்த குறைபாடுகளை அவர் விடியோ எடுத்து, அதனை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்க நினைத்திருந்தநிலையில்தான், சற்று நேரத்தில் எல்லாம் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விமானத்தில் தான் எடுத்த விடியோக்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார். அந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி விடியோவாகவும் மாறியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT