சித்து மூஸேவாலா படம்: யூடியூப் / சித்து மூஸேவாலா
இந்தியா

படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் ரிலீஸ்!

பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் வெளியாகியுள்ளன.

DIN

பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்களால் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை தற்காலிகமாக விலக்கிக் கொண்ட மறுநாளே இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது 32-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது யூடியூப் பக்கத்தில் மூன்று புதிய பாடல்கள் நேற்று (ஜூன்.11) வெளியானது.

மூன்று பாடல்கள் - 0008, நீல், டேக் நோட்ஸ் ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்று பாடல்களுமே தலா 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளளன.

இந்தப் பாடல்களில் குறிப்பாக ‘டேக் நோட்ஸ்’ என்ற பாடல் 8.5 மில்லியன் (85 லட்சம்) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது.

ராப் பாடகரான இவருக்கு இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சித்து மூசேவாலா இறந்தபிறகு இதுவரை 11 பாடல்கள் வெளியாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT