முகப்பு
இந்தியா

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவாவில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூன், 2025 at 5:27 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஜூன், 2025 at 5:10 PM

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்து வருகின்றது.

கடந்த 24 மணிநேரத்தில் தெற்கு கோவா மாவட்டத்தில் அதிகப்படியாக 131.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 13 ஜூன், 2025 at 5:27 PM

இந்நிலையில், இன்று (ஜூன் 13) முதல் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை தொடரக்கூடும் என்பதால், அம்மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும், வடக்கு கொங்கன் கடல்பகுதியில் சுமார் 35 முதல் 55 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.