ஆயுதங்கள் கோப்புப்படம்
இந்தியா

மணிப்பூரில் விடிய விடிய சோதனை: ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்...

DIN

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13 இரவு தொடங்கி ஜூன் 14 காலை வரையில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் காவல் துறை, சிஏபிஎஃப், ராணுவம், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படைகளைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கலவரம் , வன்முறையால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத் துறையிடமிருந்து வந்த தகவலையடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், காக்சிங், தௌபால் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் பல கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(ஜூன் 14) தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT