மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் கோட்டையில் அன்னாரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் 40 அடி உயரத்தில் சிவாஜியின் திருவுருவச் சிலை பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலை தரக் குறைவான பொருள்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிலை நிறுவப்பட்டு வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிலை விழுந்து உடைந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விமர்சனத்துக்கும் உள்ளானது.
அதன்பின் 83 அடி உயரத்தில் கம்பீரமாக புதிய சிலை வடிவமைக்கப்பட்டு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதனை கடந்த மே மாதம் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், சிலையின் அடியில் சிலையை தாங்கிப் பிடிக்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
இதற்கு மோசமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தியதே காரணமெனவும், சிலை கட்டுமானத்தில் பெரியளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆளும் பாஜக கூட்டணி அரசை மகாராஷ்டிர காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.