கோப்புப் படம் 
இந்தியா

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்டில் நக்சல்கள் பதுக்கிய வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (ஜூன் 18) ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதியில் அமைந்திருந்த நக்சல் முகாம் ஒன்று தகர்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த முகாமில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் மற்றும் சுமார் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வெடிப்பொருள்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு நக்சல்கள் பதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அந்த வெடிகுண்டுகள் அனைத்தும் அப்பகுதியிலேயே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அதற்கு காரணமான நக்சல்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

SCROLL FOR NEXT