கேரளம் உள்பட நான்கு மாநில இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
குஜராத்தின் விசாவதா், காடி, கேரளத்தின் நிலம்பூா், மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாபின் லூதியானா (மேற்கு) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
5 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது. மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருப்பது உள்பட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி,
நிலம்பூரில் முதல் இரண்டு மணி நேரத்தில் வாக்குப்பதிவு 13.15 சதவீதமாக இருந்த நிலையில், 11 மணிக்கு 30.15 ஆக அதிகரித்துள்ளது.
263 வாக்குச் சாவடிகளில் அதிகாலை முதலே மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். 10 வேட்பாளர் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க 2.32 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
10 வேட்பாளர்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் எம்.ஸ்வராஜ், ஆர்யாதன் ஷௌகத் (காங்கிரஸ் தலைமைலின ஐக்கிய ஜனநாயக முன்னணி), திரிணாமுல் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுயேச்சை வேட்பாளருமான பி.வி. அன்வர், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மோகன் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
11 மணி நிலவரப்படி..
குஜராத்தின் விசாவதர் - 28.15 %. காடி - 23.85 %
கேரளத்தின் நிலாம்பூரில் 30.15 %
பஞ்சாபின் லூதியானா - 21.51 %
மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் - 30.60 %
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.