பிரதிப் படம் ENS
இந்தியா

பிரதமர் வருகையால் ஒடிசா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், புவனேஸ்வர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

DIN

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், புவனேஸ்வர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து, ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஓராண்டு ஆட்சியின் கொண்டாட்ட நிகழ்ச்சியானது, ஒடிசாவில் ஜூன் 20 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், பிரதமரின் வருகையால் புவனேஸ்வர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தினால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

இல.கணேசன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்!

சதுரங்கப் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT