மருத்துவமனையில் சோனியா, ராகுல் காந்தி.. ANI
இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பற்றி...

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூன் 19) வீடு திரும்பினார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) கடந்த ஜூன் 15 ஆம் தேதி வயிறு தொற்று பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் சோனியா காந்தி இன்று(ஜூன் 19) வீடு திரும்பினார்.

சோனியா காந்தியை அழைத்துச் செல்ல அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT