க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியக் கல்வித் துறைக்குச் சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்(க்யூஎஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் மாசூசுட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பிடித்துள்ளது. தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்(ஐஐடி) சிறந்த தரவரிசையில் உள்ள இந்திய நிறுவனமாகும், இது 123வது இடத்தைப் பிடித்துள்ளது.
க்யூஎஸ் தரவரிசையில்.. 10 இந்திய பல்கலைக்கழங்கள்..
இந்தாண்டு தரவரிசையில் 8 புதிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் தற்போது 54 கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கா (192 கல்வி நிறுவனங்கள்), இங்கிலாந்து (90 கல்வி நிறுவனங்கள்), சீனாவில் (72) அதன்பிறகு நான்காவதாக அதிக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நாடாக இந்தியாவில் (54 கல்வி நிறுவனங்கள்) சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு க்யூஎஸ் தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட10 இந்திய பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் இந்தாண்டு க்யூஎஸ் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோர்டான் மற்றும் அஜர்பைஜான் இரண்டாவது இடத்தில் அதாவது தரவரிசையில் 6 பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
க்யூஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலில் 180வது இடத்திலும், இந்தியாவில் 3வது இடத்திலும் சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,
க்யூஎஸ் உலக பல்கலைக்கழகம் 2026 தரவரிசை, நமது கல்வித் துறைக்கு ஒரு சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளது.
இனிவரும் காலங்களில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உலக அளவில் சிறந்த சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது
பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 2014இல் வெறும் 11 பல்கலை மட்டும் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது 2026ல் 54 கல்வி நிறுவனங்களாக உயர்ந்துள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.