கோப்புப் படம் 
இந்தியா

‘தில்லியில் காலாவதியான வெளிமாநில வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது’

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் வெளிமாநில பதிவு எண்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு ஜூலை 1- முதல் எரிபொருள் நிரப்பப்படாது

Din

பத்து ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் வெளிமாநில பதிவு எண்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு ஜூலை 1- முதல் எரிபொருள் நிரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்த தலைநகா் புது தில்லியில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பழைய வாகனங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பழைய வாகனங்களை முழுவதும் உடைத்து எடைக்கு ஏற்ப பணத்தைப் பெறும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வாகனங்களை பலா் வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விடுகின்றனா் அல்லது தில்லிக்கு வெளியே பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில், பழைமையான வாகனங்கள் எந்த மாநிலங்களைச் சோ்ந்ததாக இருந்தாலும் அவற்றுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள தானியங்கி கேமராக்கள் வாகனப் பதிவு எண்ணை ஸ்கேன் செய்து, பழைய வாகனமாக இருந்தால் வாகன கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சென்றுவிடும்.

தில்லி உள்பட குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத், கெளதம் புத் நகா், சோனிபத் ஆகிய இடங்களிலும் நவம்பா் 1-ஆம் முதல் அமலாகும்.

தில்லியில் தற்போது வரையில் 41 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்பட 62 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கொம்புசீவி டீசர்!

உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து!

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT