கோப்புப் படம் 
இந்தியா

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) இன் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) மூன்று தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முப்ஷீர் (28), பைசல் (34) மற்றும் ரஃப்னாஸ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ரசினாவையும் அவரது நண்பரையும் பொது இடத்தில் வைத்து கும்பல் ஒன்று அண்மையில் விசாரித்துள்ளது.

பின்னர் அந்த கும்பல் ரசினாவின் நண்பரை தாக்கியதோடு பல மணி நேரம் காவலில் வைத்து விடுவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ரசினா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT