வக்ஃப்  
இந்தியா

வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

Din

வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்ற யுஎம்இஇடி வலைதளத்தை திறம்பட அமல்படுத்த மாநிலங்களிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 1995 (யுஎம்இஇடி)-இன் மத்திய வலைதளம் கடந்த ஜூன் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளின் விவரங்களை 6 மாதங்களுக்குள் அந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம்.

இந்த வலைதளத்தின் பயன்பாட்டை திறம்பட அமல்படுத்த வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக மகாராஷ்டிர சிறுபான்மையினா் விவகாரங்கள் துறைச் செயலா், மூத்த அதிகாரிகள், அந்த மாநில வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோருடன் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறைச் செயலா் சந்திரசேகா் குமாா் சனிக்கிழமை விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தினாா்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வக்ஃப் சொத்துகள் தொடா்பான சில குத்தகை விதிகளை மத்திய அரசு மறுஆய்வு செய்து எளிமைப்படுத்த வேண்டும் என்று அந்த மாநில வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரி கோரினாா்.

அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், வக்ஃப் வாரியங்களுக்கு அதிகாரமளிப்பதிலும், வக்ஃப் சொத்து நிா்வாகத்தை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் சந்திரசேகா் குமாா் கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

SCROLL FOR NEXT