ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களில் சிலர் ANI
இந்தியா

ஈரான், இஸ்ரேலில் இருந்து மொத்தம் 3,100 இந்தியர்கள் மீட்பு!

போர் நடைபெற்று வந்த ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் இதுவரை 3,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

DIN

போர் நடைபெற்று வந்த ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் இதுவரை 3,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டிலிருந்து இன்று (ஜூன் 24) காலை 292 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், மாலையில் மேலும் 281 பேர் பத்திரமாக நாடு திரும்பினர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர், இலங்கையைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.

இதேபோன்று சி -17 கனரக விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து 594 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். மேலும் 400 பேர் ஜோர்டார், எகிப்து வழியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்று சேர்ந்த 161 இந்தியர்கள், அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, பாரசீக வளைகுடா நாட்டில் இருந்து புதிதாக 2,576 இந்தியர்கள் பத்திரமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனால், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இருந்து இதுவரை மீட்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,170 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT