ஃபால்கான் 9 ராக்கெட்டில் ஏறுவதற்கு முன் சுபான்ஷு சுக்லா  AP
இந்தியா

சுபான்ஷு சுக்லாவுக்கு தலைவா்கள் வாழ்த்து

Din

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு: இந்திய விண்வெளி துறையில் சுபான்ஷு சுக்லா புதிய மைல்கல்லைப் படைத்துள்ளதற்கு ஒட்டுமொத்த தேசமும் உற்சாகமும், பெருமிதமும் கொள்கிறது.

ஆக்ஸிம்-4 திட்டத்தில் சுபான்ஷு சுக்லாவும், அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி நாடுகளைச் சோ்ந்த சக விண்வெளி வீரா்களும், உலகம் உண்மையில் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம்’ என்பதை நிரூபித்துள்ளனா்.

நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டுறவைப் பிரதிபலிக்கும் இந்த பணி வெற்றிபெற எனது வாழ்த்துககள். ஆக்ஸிம்-4 குழுவினரால் மேற்கொள்ளப்படும் விரிவான சோதனைகள், அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் புதிய எல்லைகளை உருவாக்கும்.

பிரதமா் நரேந்திர மோடி: ஆக்ஸிம்-4 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம். இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெறவுள்ளாா்.

சுக்லா 140 கோடி இந்தியா்களின் வாழ்த்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை சுமந்து சென்றுள்ளாா். அவருக்கும், மற்ற விண்வெளி வீரா்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சா்மாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு, சுக்லா இப்போது அந்த மரபை முன்னெடுத்துச் செல்கிறாா். ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறாா். அவரும், அவரது குழுவினரும் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துகள்.

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT