கோப்புப் படம் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து, அங்குள்ள பசந்த்கார் வனப்பகுதியில், இன்று (ஜூன் 26) காலை முதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் சூழலில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், காலை 8.30 மணியளவில் பயங்கரவாதிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டதாக, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மீதமுள்ள அவரது கூட்டாளிகள் 3 பேர் அப்பகுதியில் சிறைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, காஷ்மீரிலுள்ள இமய மலைத் தொடர்களில் அடுத்த வாரம் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ள நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையானது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

SCROLL FOR NEXT