கோப்புப் படம் PTI
இந்தியா

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கவிருப்பதாக அறிவிப்பு

DIN

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள், தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி, அவற்றை பட்டியலில் இருந்து நீக்குவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தக் கட்சிகள், 2019 ஆம் ஆண்டுமுதல் 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடவில்லை.

இந்தக் கட்சிகளின் அலுவலகங்களும் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இருப்பதாகத் தெரியவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும், தற்போது பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அடிப்படை நிபந்தனையை பூர்த்திசெய்யத் தவறியதாகக் கூறியது.

இந்தக் கட்சிகளின் பதிவுகளை நீக்கத்திற்கான விளக்கக் கேட்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விளக்கத்துக்கு 21 நாள்களுக்குள் பதில் தரவில்லையென்றால், அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.

இந்த பட்டியல் நீக்க நடவடிக்கையானது, அரசியல் பதிவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், அரசியல் செயல்முறையில் அதிக வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறலையும் கொண்டுவரப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு மோடி வாழ்த்து!

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

SCROLL FOR NEXT