நக்சல் பாதிப்பு 
இந்தியா

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மத்திய அரசின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியல் வெளியீடு..

DIN

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கட்சிரோலியின் ஒரு பகுதியை மாவோயிஸ்ட் நடவடிக்கை இல்லாதது என்று அறிவித்ததையடுத்து, தெற்கு கட்சிரோலி விரைவில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் என்று உறுதியளித்தார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அரசுத் தீர்மானத்தில், கோண்டியா மாவட்டத்தில் உள்ள சலேகாசா, தேவ்ரி மற்றும் அர்ஜுனி மோர்கான் தாலுகாக்கள் மற்றும் முழு கட்சிரோலி மாவட்டமும் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஃபட்னவீஸ் கூறியது, கட்சிரோலி பெரும்பாலும் மகாராஷ்டிரத்தின் கடைசி மாவட்டம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது மாநிலத்தின் கிழக்கு எல்லையில் உள்ளது. மகாராஷ்டிரம் விரைவில் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும். மாவோயிஸ்ட்களில் அதிகமானோர் சரணடைந்து வருவதாகவும், அதேசமயம் புதியவர்கள் யாரும் சேர மறுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கட்சிரோலி காவல்துறை மாவட்டத்தில் நக்சல் நடவடிக்கைகளைக் கிட்டத்தட்ட ஒழித்து விட்டது. வடக்கு கட்சிரோலி இப்போது மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் இல்லாமல் உள்ளது, தெற்கு கட்சிரோலி விரைவில் நக்சல்களிடமிருந்து விடுபடும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கட்சிரோலி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் குறைந்து வருவதாக அவர் கூறினார்.

மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் கட்சிரோலியை முதல் மாவட்டம் ஆக்குவதற்கான செயல்முறையை அரசு தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

SUMMARY

The entire Gadchiroli district and four talukas in Gondia remain "Naxal-infested", according to the Maharashtra government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை ஏற்கிறாா் ராகுல்!

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு - மகாராஷ்டிரத்தில் அதிகம்

SCROLL FOR NEXT