உத்தரகண்ட் பேருந்து விபத்து PTI
இந்தியா

எங்கள் தவறுதான் என்ன? கடவுளிடம் கண்ணீருடன் கேட்ட சிறுவன்!

டேஹ்ராடூன் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவன், எங்கள் தவறுதான் என்ன என்று கடவுளிடம் கண்ணீருடன் கேட்ட விடியோ

DIN

உத்தரகண்டில் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த பார்த் சோனி என்ற 10 வயது சிறுவன் கண்ணீருடன் கடவுளிடம் நாங்கள் செய்த தவறுதான் என்ன? என்று கேட்கும் காட்சி கலங்காத நெஞ்சையும் கலக்க வைப்பதாக உள்ளது.

டேஹ்ராடூனில், ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்ஹ்திர் பகுதியில் வியாழக்கிழமை சென்று கொணடிருந்த பேருந்து அலக்நந்தா ஆற்றில் விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். எட்டு பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் விஷால் சோனி (42), அவரது மனைவி கௌரி சோனி (41) பலியான நிலையில், அவர்களது மகன் பர்த் சோனி (10) உயிர் பிழைத்துள்ளார். இவர்களது மகள்கள் தேஜஸ்வினி (17), மானஸ்வினி (15), பெற்றோருடன் சார் சாம் யாத்திரை செல்லாமல், ராஜ்கரில் தங்களது வீட்டிலேயே இருந்துவிட்டனர்.

தனது பெற்றோரின் உடல்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் அமர்ந்திருந்த பர்த், கண்ணீர்விட்டபடி, கைகளை மடக்கிக் கொண்டு, பத்ரிநாதா, என்ன இப்படி செய்துவிட்டாய்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? நாங்கள் உன் பக்தர்கள் அல்லவா? என்று கேட்டு கதறும் விடியோ பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவைப்பதாக உள்ளது.

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த 19 பக்தர்கள், குடும்பத்தோடு, பத்ரிநாத் கோயிலுக்கு தரிசனம் செய்ய 31 பேர் அமரும் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து ஆற்றில் விழுந்துள்ளது.

இதில் பலியான விஷால் மற்றும் கௌரியின் உடல்கள் உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT