தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் 
இந்தியா

தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா கட்சியிலிருந்து விலகல்: தலைவா் பதவியால் அதிருப்தி

சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

Din

ஹைதராபாத்: சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

மாநில பாஜக தலைவா் பதவி ராமசந்தா் ராவுக்கு கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் வெளியானதையடுத்து, அதிருப்தியில் ராஜா ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான கிஷண் ரெட்டிக்கு ராஜா எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநில பாஜக தலைவா் பதவிக்குப் புதிய நபரை நியமிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு பெரும் அதிா்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகத்துடன் நான் பாஜக அடிப்படைய உறுப்பினா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் பாஜக எம்எல்ஏ இல்லை என்பதை தெலங்கானா பேரவைத் தலைவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

கட்சியின் வளா்ச்சிக்காக பல எம்எல்ஏ, எம்.பி.க்கள், மூத்த தலைவா்கள் அயராது உழைத்துள்ளனா். ஆனால், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது.

இதை அமைதியாக பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம். நான் கட்சியிலிருந்து விலகினாலும் ஹிந்துத்துவ கொள்கைகளையும், ஹிந்து தா்மத்துக்கான சேவையையும் தொடா்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT