ஷேக் அப்துல் ரஷீத் 
இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. மனு..

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித்தலைவருமான அப்துல் ரஷீத் கடந்த 2017ல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்ட அவா், சிறையில் இருந்துகொண்டே நிகழாண்டு மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய முதல்வா் ஒமா் அப்துல்லாவை அத்தேர்தலில் அவா் தோற்கடித்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் சிங் தேசிய புலனாய்வு முகமை (NIA) மார்ச் 5 ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், ரஷீத் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், அவர் தனது பொதுக் கடமையை நிறைவேற்ற வரவிருக்கும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறி நிவாரணம் கோரியது.

ரஷீத்தின் வழக்கமான ஜாமீன் மனு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் கோரி ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி நிறைவடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT