முகப்பு
’லயன் சஃபாரி’ சென்ற மோடி
இந்தியா

’லயன் சஃபாரி’ சென்ற மோடி!

குஜராத்தில் ’லயன் சஃபாரி’ சென்ற பிரதமர் மோடி...

இந்தியா

’லயன் சஃபாரி’ சென்ற மோடி!

குஜராத்தில் ’லயன் சஃபாரி’ சென்ற பிரதமர் மோடி...

Updated On : 3 மார்ச், 2025 at 5:59 AM
’லயன் சஃபாரி’ சென்ற மோடி
பகிர்:

குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்துக்குள் சிங்கத்தை மிக அருகில் பார்க்கும் ’லயன் சஃபாரி’யை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மேற்கொண்டார்.

குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச வனவிலங்கு நாளையொட்டி, கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தை இன்று பார்வையிட்டார்.

உலகில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடமான கிர் சரணாலயத்துக்குள் சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளை மிக அருகில் பார்க்கும் ‘லயன் சஃபாரி’யை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

பலத்த பாதுகாப்புடன் ’லயன் சஃபாரி’ சென்ற மோடி, சிங்கங்களை கேமிராக்கள் மூலம் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.

மேலும், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து சரணாயலத்தின் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆசிய சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் கொண்ட புதிய கால்நடை மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

அதன்பிறகு, தேசிய வனவிலங்கு ஆணையத்தின் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் மோடி, நாட்டின் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

அதேபோல், வனப் பாதுகாப்பில் பாலின உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பெண் வன ஊழியர்களுடன் மோடி கலந்துரையாடவுள்ளார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் வனவிலங்கு நாளையொட்டி பதிவிட்ட மோடி தெரிவித்திருப்பதாவது:

”பூமியின் நம்பமுடியாத பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான உறுதிபாட்டை மீண்டும் எடுப்போம். ஒவ்வொரு உயிரினமும் முக்கிய பங்கை வகிக்கிறது.

எதிர்கால சங்ததியினருக்காக உயிரினங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம். வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்புக்காக பெருமை கொள்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →