இந்தியா

தோல்வி பயம்தான் மிக மோசமான தோல்வி: ஜக்தீப் தன்கர்

இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா வழங்குவதாக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார்.

DIN

இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா வழங்குவதாக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார்.

சண்டிகர் மாநிலம் சிர்சாவில் நடைபெற்ற ஜன்நாயக் சௌத்ரி தேவிலால் வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு, மாணவர்களுடன் உரையாற்றினார்.

மாணவர்களுடன் அவர் பேசியதாவது, ’’மாணவர்களாகிய நீங்கள், உங்கள் வாழ்க்கையை ஒரு நதி போல ஓட விடுங்கள்; கால்வாயைப் போல அல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தை எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு காலம் இருந்தது.

இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. நீங்கள் அனைவடும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வி பயம் என்பதுதான் வாழ்க்கையின் மிக மோசமான தோல்வி. வாழ்க்கையில் தோல்விதான் உங்களை மேம்படுத்தும்.

சந்திரயான்-2 தோல்வியடைந்து விடும் என்று சிலர் கூறியபோதும், நிலவின் மேற்பரப்பு வரையில் சந்திராயன்-2 சென்றது. இருப்பினும், இது 90 சதவிகித வெற்றிதான். இதனால்தான், சந்திராயன்-3 வெற்றி பெற்றது எனலாம்.

வரலாற்றில் பெரிய சாதனைகள் பலவும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னதாக மிகவும் பலவீனமாக இருந்த நமது பொருளாதாரத்தை ஆராயும்போது, இன்றைய அந்நியச் செலாவணி இருப்பு 700 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT