இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்ணின் ஆண்நண்பர் பலி!

கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண் உள்பட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உடனிருந்த நண்பர் பலியானார்.

DIN

கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண் உள்பட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உடனிருந்த நண்பர் பலியானார்.

கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டம் அருகே இஸ்ரேலியப் பெண் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பங்கஜ், ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் என நால்வரும் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் நால்வர் மற்றும் பணிப்பெண் ஒருவர் என ஐந்து பேரும் வியாழக்கிழமையில் ஓர் ஏரிக்கரையில் இரவு உணவு மேற்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த தெலுங்கு பேசும் ஒருவரும், கன்னடம் பேசும் ஒருவரும் சேர்ந்து பெட்ரோல் நிலையத்துக்கு வழி கேட்பதுபோல, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண்களுடன் இருந்த 3 ஆண் நண்பர்களையும் அருகிலிருந்த கால்வாயில் தள்ளிவிட்டு, 2 பெண்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில், கால்வாயில் தள்ளப்பட்டு விழுந்த டேனியலும் பங்கஜும் நீந்தி உயிர்தப்பினர். இருப்பினும், பிபாஷ் காணாமல் போன நிலையில், அவரது உடல் பெங்களூரு டெக் ஹப் பகுதியிலிருந்து 350 கி.மீ. தொலைவில் கரை ஒதுங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடி வருவதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம்: இபிஎஸ்

சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள் திறப்பு!

ஜன நாயகன் இசை வெளியீட்டுத் தேதி!

முதல்வர் பதவி விவகாரம்! கர்நாடக எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT