பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் செஸ் வீராங்கனை வைஷாலியின் பதிவு.  
இந்தியா

மகளிர் நாள்: பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தைக் கையாளும் 6 பெண்கள் யார்?

மகளிர் நாளையொட்டி இன்று(மார்ச் 8) பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்கள் கையாள்கின்றனர்.

DIN

மகளிர் நாளையொட்டி இன்று(மார்ச் 8) பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்கள் கையாள்கின்றனர்.

சர்வதேச மகளிர் நாளையொட்டி இன்று(மார்ச் 8) ஒரு நாள் தனது சமூக வலைதள பக்கத்தை பெண்கள் நிர்வகிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியிருந்தார்.

அதன்படி இன்று பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்கள் கையாள்கின்றனர்.

ஒடிசாவைச் சேர்ந்த அணு விஞ்ஞானி எலினா மிஸ்ரா,

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி,

தில்லியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அஞ்சலி அகர்வால்

காளான் தொழில் செய்யும் பிகாரைச் சேர்ந்த அனிதா தேவி,

ராஜஸ்தானைச் சேர்ந்த 'பிரன்டியர் மார்கெட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஜய்தா ஷா,

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஆகிய 6 பேரும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் தாங்கள் சந்தித்த சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி, பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை கையாள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஜூன் 21-ஆம் தேதி பிறந்தேன். அது தற்செயலாக இப்போது சர்வதேச யோகா தினமாக பிரபலமாக உள்ளது. நான் 6 வயதிலிருந்தே செஸ் விளையாடி வருகிறேன். பல போட்டிகளில் வென்று இந்தியாவை பிரதிநித்துவப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.

அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது, தடைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். உங்கள் ஆர்வம் உங்கள் வெற்றிக்கு உதவும்.

எனது FIDE தரவரிசையை மேலும் மேம்படுத்தி, எனது நாட்டை பெருமைப்படுத்த விரும்புகிறேன். சதுரங்கம் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. நான் விரும்பும் விளையாட்டில் மேலும் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். இளம் பெண்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT