கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அதில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களைப் பார்த்தேன். சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை தேய்த்து குளிப்பதையும் பார்த்தேன்.
இந்தியாவில் உள்ள எந்த நதியும் தூய்மையாக இல்லை. தனது கட்சித் தலைவர் பாலா நந்த்கோன்கர் மகா கும்பமேளாவிலிருந்து புனித நீரைக் கொண்டு வந்ததார். ஆனால் அதைக் குடிக்க நான் மறுத்துவிட்டேன்.
'கங்கை விரைவில் தூய்மை செய்யப்படும்' என்ற கூற்றுகளை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்ததிலிருந்து கேள்விப்பட்டு வருகிறேன்.
தற்போது இந்த கட்டுக்கதையிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.