திருமணம்(கோப்புப்படம்) 
இந்தியா

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை?

DIN

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் அறையிலிருந்து வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டி அவர்களை எழுப்ப முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், உள்ளேயிருந்து எவ்வித சமிக்ஞையும் வராததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கணவனும் மனைவியும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தூக்கில் தொங்கியபடி கிடந்த மணமகனையும், கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்த மணமகளையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் உறவினர்கள் கொண்டு சேர்த்தனர். அங்கே அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன்பின், இருவரது உடல்களும் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், மணமகள் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படுகிறது.

புதுமண தம்பதி திடீரென உயிரிழக்க என்ன காரணம் என்பதை வழக்குப்பதிந்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு

விவசாயி அடித்துக் கொலை: இருவா் கைது

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகை புது கடற்கரையில் நீா் சறுக்கு சாகச விளையாட்டுப் போட்டி

"ஒருங்கிணைந்த என்டிஏ, ஒருங்கிணைந்த பிகார்': தேர்தல் முழக்க வாசகத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி

SCROLL FOR NEXT