புது தில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (மாா்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை அமா்வுகளை ரத்து செய்ய இரு அவைகளின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஹோலி பண்டிகை தினமான மாா்ச் 14-ஆம் தேதி, இரு அவைகளுக்கும் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மக்களவை மற்றும் மாநிலங்களவை அமா்வுகளை ரத்து செய்வதாக இரு அவைகளின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதை ஈடுசெய்யும் வகையில் மாா்ச் 29-ஆம் தேதி அமா்வை நடத்திக்கொள்ள மக்களவை அலுவல் ஆலோசனை குழு பரிந்துரைத்தது.