FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ.54,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

Updated On : 21 மார்ச் 2025, 1:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட 8 மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மூலதன கையகப்படுத்துதல் நடைமுறையின் பல்வேறு நிலைகளையும் வேகப்படுத்துவதற்கான விதிகளுக்கும் டிஏசி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

2025-ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments