கோப்புப் படம் 
இந்தியா

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார், பாட்னாவில் ஆசியா மருத்துவமனை இயக்குநர் சுர்பி ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் அதிகாரி அதுலேஷ் ஜா சனிக்கிழமை தெரிவித்தார். சுர்பி ராஜுக்கு பல இடங்களில் குண்டு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் பலியானார்.

இதுகுறித்து அந்த காவல் அதிகாரி மேலும் கூறுகையில், "மாலை 3:30 மணியளவில், ஆசியா மருத்துவமனை இயக்குநர் சுர்பி ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் அங்கு சென்றபோது, ​​சில ஊழியர்கள் இயக்குநரின் அறைக்குச் சென்றபோது, ​​அவர் மயக்கமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாகக் கூறினர்.

சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

உடனே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு குண்டு காயங்கள் பல இருப்பது கண்டறியப்பட்டன. பின்னர் அங்கிருந்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். தற்போது, ​​அவரது இறப்புச் செய்தி வந்துள்ளது. காவல் துறையினர் அனைத்து கோணங்களிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ போதும்... திவ்ய பாரதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

SCROLL FOR NEXT