FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

Updated On : 25 மார்ச் 2025, 4:13 am IST
டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம்
பகிர்:

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் இருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியான 44.19 லட்சம் டன்னில் சீனா 19.17 சதவீதம் பங்கு வகிக்கிறது.

2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையிலான முந்தைய நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா மேற்கொண்ட 55.67 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியில் சீனா 40 சதவீதம் (22.28 லட்சம் டன்கள்) பங்கு வகித்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யூரியாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான டை-அம்மோனியம் பாஸ்பேட், ரஷியா, சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோா்டான் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments