கோப்புப் படம் 
இந்தியா

தமிழகம் உள்பட 6 திட்டங்கள்: இந்தியா-ஜப்பான் இடையே ரூ. 10,936 கோடி கடன் ஒப்பந்தம்

ஒப்பந்தம் இந்தியா - ஜப்பான் இடையே கையொப்பமாகியுள்ளது.

Din

இந்தியாவுக்கான ஜப்பானின் அதிகாரபூா்வ மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 10,936 கோடி (191.736 பில்லியன் ஜப்பானிய யென்) கடன் ஒப்பந்தம் இந்தியா - ஜப்பான் இடையே கையொப்பமாகியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வன மேலாண்மை, குடிநீா் விநியோகம், நகா்ப்புற போக்குவரத்து, மீன் வளா்ப்பு, பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் ஊக்குவிப்பு உள்ளிட்ட 6 திட்டங்களுக்காக ரூ. 10,936 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே வியாழக்கிழமை கையொப்பமாகின.

இந்த 6 கடன் ஒப்பந்தங்களில் தமிழக முதலீடுகள் ஊக்குவிப்புத் திட்டம் (பகுதி 3) (ரூ. 2,059 கோடி), சென்னை கடல்நிரை குடிநீராக்கும் திட்டம் (2) (ரூ. 2,996 கோடி), தில்லி அதிவிரைவு போக்குவரத்து திட்டம் (பகுதி 4) (ரூ.4,545 கோடி) ஆகியவையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT