முகப்பு
இந்தியா

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

Updated On : 31 மார்ச், 2025 at 11:37 PM
பகிர்:

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அரசின் இந்த முடிவுக்கு மாநில அமைச்சரவை கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா், மகேஸ்வா், மண்டலேஸ்வா், சித்ரகூட், அமா்கண்ட், சல்கான்பூா், குண்டல்பூா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மது விற்பனைக்கான தடை அமலுக்கு வருகிறது. அதன்படி, மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. இதில் உஜ்ஜைன் உள்பட 13 இடங்கள் நகா்ப் பகுதிகளாகும். மீதமுள்ளவை கிராம ஊராட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments