X | Chandrababu Naidu
இந்தியா

எப்போதும் மகிழ்ச்சியான பிரதமரை பஹல்காம் தாக்குதல் மாற்றி விட்டது: சந்திரபாபு நாயுடு

பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்பதாக சந்திரபாபு நாயுடு பேச்சு

DIN

பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி நகரை மறுஉருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். மேலும், ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது, ``பிரதமர் மோடிதான், இந்தியாவுக்கான சரியான தலைவர். அவர் பொதுவாகவே மிகவும் மகிழ்ச்சியான மனிதர். ஆனால், அத்தகைய மகிழ்ச்சியான நிலையில் இருந்தவரை தீவிர மனநிலைக்கு பஹல்காம் தாக்குதல் மாற்றியது.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுடன் ஆந்திர மக்கள் 5 கோடி பேர் உள்பட, ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

பசுமை சாம்பியன் விருது: தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

ஆடையில் தீப் பற்றி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT