இந்தியா

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் கூறியிருப்பதைப் பற்றி...

DIN

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மட்டுமின்றி மற்ற காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமுதசுரபியில் ரூ.1 கோடிக்கு கைத்தறி விற்பனை இலக்கு

செப். 28-இல் குரூப் 2 தோ்வு: 79 தோ்வு மையங்கள் தயாா்

இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் உயிரிழப்பு; தம்பி காயம்

மணப்பாறை, மருங்காபுரி வட்டாட்சியரகங்களில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT