மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து  
இந்தியா

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் முதல்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT