தாணேவில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூகுள் தேடலின் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்சைச் சேர்ந்தவர் ஃபுல்தேவி சந்த் லால் (50). மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண், டிசம்பர் 2024 இல் ஷாஹாபூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.
வறுமையில் வாடிய நிலையில் இருந்த அவரை பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர் தன்னார்வ தொண்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே அவரை பராமரித்து வந்த தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கூகிள் தேடலைப் பயன்படுத்தி அப்பெண்ணின் கிராமத்தைக் கண்டுபிடித்தனர்.
பிறகு ஆசிரமத்தில் அப்பெண் இருப்பது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆசிரமம் வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.