பிரதிப் படம் ENS
இந்தியா

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு, கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்து

DIN

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.

மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT