ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதியதாக 2 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாள்களில் புதியதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் மும்பையிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது. அதன்மூலம், ஜார்க்கண்டின் முதல் பாதிப்பு பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் மருத்துவமனைகளிலும், ஒருவர் அவரது வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை மாநில தலைநகர் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டாலும், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு ராஞ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் யாரும் நோய் தொற்று உறுதியாகாமல் எந்தவொரு மருத்துக்களையும் உட்கொள்ள வேண்டாமெனவும்; மூச்சுவிடுவதில் சிரமம், கடுமையான காய்ச்சல் அல்லது இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவிகளைப் பெறுமாறும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.