தெலங்கானா அமைச்சர் அசாருதீன் 
இந்தியா

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

தெலங்கானா அமைச்சர் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானா அமைச்சரவையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பொது நிறுவனங்கள் ஆகிய துறைகள் ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் நிர்வாகியுமான அசாருதீன், கடந்த அக்.31 ஆம் தேதி தெலங்கானா அரசின் அமைச்சராகப் பதவியேற்று கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அசாருதீனுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பொது நிறுவனங்கள் ஆகிய துறைகளை தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா இன்று (நவ. 4) ஒதுக்கீடு செய்துள்ளார்.

முன்னதாக, சிறுபான்மையினர் நலத்துறையை அமைச்சர் அட்லூரி லட்சுமண குமார் மற்றும் பொது நிறுவனங்கள் துறையை முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதல் இஸ்லாமிய அமைச்சரான அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

Former Indian cricketer and Telangana minister Azharuddin has been allocated the portfolios of Minority Affairs and Public Enterprises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT