பிகாரில் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட நிரஞ்சன் குஷ்வாஹாவின் சகோதரர் உள்பட அவரது குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரின் ஆளுங்கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் உறுப்பினரும், மாநில பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவையில் போட்டியிட்டவருமான நிரஞ்சன் குஷ்வாஹாவின் மூத்த சகோதரர் நவீன் குஷ்வாஹா உள்பட அவரது குடும்பத்தினர் வீட்டில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நவீன் குஷ்வாஹா, அவரது மனைவி மாலா தேவி, மகள் தனு பிரியா ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும்நிலையில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வரும்நிலையில், தனு பிரியா வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம். இதனைக் கண்ட அவரது தந்தை நவீனும், படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததுடன், இருவரும் உயிரிழந்ததைக் கண்டு தாயார் மாலா மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.