கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளாகியிருக்கிறது.
மும்பையில், தாவூத் இப்ராஹிமின் மறைந்த சகோதரி ஹசீனா பார்க்கருக்குச் சொந்தமான சொத்துகள் செவ்வாயன்று ஏலம் விடப்பட்ட போது ஏலத்தில் ஒருவர்கூட பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரத்னகிரி மாவட்டம், கேத் தாலுகாவில், தாவூத்தின் சொந்த கிராமமான மும்பாகேவில் நான்கு விவசாய நிலங்கள் உள்பட ஒன்பது சொத்துகள் ஏலத்துக்கு விடப்பட்டன. ஆனால், ஏலம் எடுக்க ஒருவரும் வராததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு விவசாய நிலங்களும் முதலில் தாவூத்தின் தாய் அமினா பி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு பிறகு, அது அவரது சகோதரி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.