கோப்புப் படம் 
இந்தியா

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப்பத்திரிகை தொடா்பாக நவ.29-இல் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் நவ.29-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் நவ.29-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா? என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் 29-ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

டிச. 1 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஓடிடியில் டிரெண்டாகும் அதர்வாவின் தணல்!

2 மாதங்களுக்குப் பிறகு தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்!

SCROLL FOR NEXT