தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிம்மதியாக ஓய்வுபெற முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரேகாவில் காங்கிரஸ் பிரசாரத்தில் பேசுகையில், ``ஞானேஷ் குமார், நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது நடக்காது. ஞானேஷ் குமார் என்ற பெயரை மறந்துவிடக் கூடாது என்று மக்களிடம் நான் கூறுவேன். எஸ்.எஸ். சாந்து, விவேக் ஜோஷியின் பெயரையும் மறந்து விடாதீர்கள்.
ஹரியாணாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.