அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், ``அனைத்தும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அவர் (பிரதமர் மோடி) ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பெரும்பாலும் நிறுத்தி விட்டார்.
அவர் எனது நண்பர். நாங்கள் அடிக்கடி பேசுகிறோம். நான் அங்கு செல்ல வேண்டும் அவர் விரும்புகிறார். அவருடன் சிறந்த பயணத்தையும் நான் மேற்கொண்டுள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தியாவுக்கு அடுத்தாண்டு செல்வீர்களா? என்ற கேள்விக்கு, ``அதுவும் நடக்கலாம்’’ என்று டிரம்ப் பதிலளித்தார்.
இதன் மூலம், இந்தியாவுக்கு டிரம்ப் வருகைதர இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டில் தில்லியில் குவாட் உச்சி மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும்.
இருப்பினும், உச்சி மாநாட்டின் தேதிகள் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிக்க: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க வேண்டாம்! தமிழகமே விழித்துக்கொள்! -அஜித்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.