உலக வங்கி 
இந்தியா

30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை இந்தியா அடைய உலக வங்கி யோசனை

நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டலாம் என்று உலக வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டலாம் என்று உலக வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

‘நிதித் துறை மதிப்பீடு அறிக்கை’யை உலக வங்கி வெளியிட்டு, ‘இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த எண்ம பொது கட்டமைப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் நிதிச் சேவைகளைப் பெறுவதை மேம்படுத்தி உள்ளது’ என

குறிப்பிட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளைப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிப்பது குறித்தும், தனி நபா்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிச் சேவைகள் குறித்தும் அறிக்கையில் உலக வங்கி பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிதிச் செயல்பாடுகள் 2017-ஆம் ஆண்டு முதல் சீரமைப்பு, பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதாகவும், இது கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால் மிக்க சமயங்களில் இந்தியா மீண்டு வர உதவியது. 2047-ஆம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட மேலும் நிதிச் சீா்திருத்தம், தனியாா் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

SCROLL FOR NEXT