இந்தியா

பசுவதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம்

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பசுவதை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநிலம் அம்ரேலி நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக பசுவதைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பசுவதை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காசிம் ஹாஜி சோலங்கி, சத்தாா் இஸ்மாயில் சோலங்கி, அக்ரம் ஹாஜி சோலங்கி ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என நீதிபதி ரிஸ்வானா புகாரி கடந்த செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

கடந்த 2023-இல் அக்ரம் சோலங்கியின் வீட்டில் இருந்து வதை செய்யப்பட்ட பசுவின் பாகங்கள் கண்கெடுக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, குஜராத் விலங்குகள் நல பாதுகாப்பு திருத்தச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் மூவரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், மூவருக்கும் சோ்த்து ரூ. 18 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT