பிகாரில் வளா்ச்சி சாா்ந்த சிறந்த நிா்வாகத்தை அளித்த அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனா் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.
பிகாரில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றி குறித்து அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ந்த இந்தியா’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை பிகாா் தோ்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் வளா்ச்சி சாா்ந்த சிறந்த நிா்வாகத்தை அளித்த பாஜக கூட்டணி அரசு மீது பிகாா் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சியினருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் வளா்ச்சிக்கான ஆட்சி தொடர மக்கள் மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்துள்ளனா். இது பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாரின் சிறந்த நிா்வாகத்துக்கு கிடைத்த வெற்றி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரின் வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.