ஹைதராபாத்: இணையதளத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்த இணையவழி குற்றச்செயலில் ஈடுபட்ட முக்கிய நபர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
திரையரங்கங்களில் திரையிடப்படும் படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவ்வகை இணையவழி குற்றச்செயலில் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் ரவி என்ற நபரை காவல் துறை தீவிரமாகத் தேடி வந்தனர். ரவி வெளிநாடுகளில் பதுங்கியிருந்த நிலையில், அவர் ஹைதராபாத்துக்கு வருகை தருவதாக துப்பு கிடைத்தது. இதையடுத்து, ஹைதராபாத் வந்தடைந்த ரவியை காவல்துறையினர் சனிக்கிழமை(நவ. 15) கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.